Homeசெய்திகள்சினிமாவிஷாலின் அடுத்த பிளாக்பஸ்டர்.... 'ரத்னம்' படத்தின் முதல் விமர்சனம்!

விஷாலின் அடுத்த பிளாக்பஸ்டர்…. ‘ரத்னம்’ படத்தின் முதல் விமர்சனம்!

-

நடிகர் விஷால் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்த இந்த படம் விஷாலுக்கு சிறந்த கம்பேக் படமாக அமைந்தது. விஷாலின் அடுத்த பிளாக்பஸ்டர்.... 'ரத்னம்' படத்தின் முதல் விமர்சனம்!அதைத்தொடர்ந்து விஷால், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படமானது நாளை (ஏப்ரல் 26) உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் ட்ரைலர் மற்றும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் விமர்சனம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.விஷாலின் அடுத்த பிளாக்பஸ்டர்.... 'ரத்னம்' படத்தின் முதல் விமர்சனம்! அதன்படி ரத்னம் திரைப்படத்தில் யோகி பாபுவின் நகைச்சுவை மற்றும் அம்மா சென்டிமென்ட் படத்தில் நன்றாக வேலை செய்துள்ளதாகவும், இந்த படம் அனைவரையும் கவரும் மசாலா என்டர்டெயினர் படமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதன்படி இந்த படம் குடும்பத்துடன் பார்ப்பதற்கு நல்ல படம் என்றும் இது விஷாலின் மற்றொரு வெற்றி படமாக அமையும் என்றும் இண்டஸ்ட்ரியில் இருக்கும் பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

MUST READ