Homeசெய்திகள்சினிமாவிஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவாகும் 'நேசிப்பாயா'.... ரிலீஸ் குறித்த தகவல்!

விஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவாகும் ‘நேசிப்பாயா’…. ரிலீஸ் குறித்த தகவல்!

-

விஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவாகும் நேசிப்பாயா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.விஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவாகும் 'நேசிப்பாயா'.... ரிலீஸ் குறித்த தகவல்!

இயக்குனர் விஷ்ணுவரதன் தமிழ் சினிமாவில் குறும்பு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து இவர் அஜித் நடிப்பில் பில்லா, ஆரம்பம் ஆகிய வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்தது இவர், மீண்டும் அஜித்துடன் இணைய போவதாக சமீபத்தில் விழா மேடை ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் இவர், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நடிப்பில் நேசிப்பாயா எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து குஷ்பூ, சரத்குமார், பிரபு, ராஜா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தினை எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கேமரான் எரிக் பிரசன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். விஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவாகும் 'நேசிப்பாயா'.... ரிலீஸ் குறித்த தகவல்!ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்படும் என சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ