Homeசெய்திகள்சினிமாமீண்டும் 'கட்டா குஸ்தி' பட இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷால்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மீண்டும் ‘கட்டா குஸ்தி’ பட இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷால்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

மீண்டும் 'கட்டா குஸ்தி' பட இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷால்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அதே சமயம் விஷ்ணு விஷால் மேலும் பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிங்கப்பூர் சலூன் பட இயக்குனர் கோகுல் நடிப்பில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. அதுமட்டுமில்லாமல் கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் வெளியான கட்டாகுஸ்தி பட இயக்குனர் செல்லா அய்யாவு உடன் மீண்டும் கூட்டணி அமைக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தானே தயாரிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால் ஏற்கனவே செல்லா அய்யாவு இயக்கத்தில் சிலுக்குவார்பட்டி சிங்கம்  திரைப்படத்தில் நடித்துள்ளார். கட்டா குஸ்தி படத்திற்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக இவர்களின் கூட்டணி இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ