விஷ்ணு விஷாலின் ராட்சசன் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். இந்த படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து அமலாபால், அம்மு அபிராமி, காளி வெங்கட், முனீஸ் காந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். சைக்கோ கிரைம் திரில்லர் படமாக வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை விஷ்ணு விஷாலின் முண்டாசுப்பட்டி திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் எழுதி இயக்கியிருந்தார்.
தற்போது ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷாலின் கூட்டணி ராட்சசன் இரண்டாம் பாகத்தில் இணைய இருக்கிறது. விஷ்ணு விஷாலின் 21 வது படமாக உருவாக இருக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதன்படி ராட்சசன் 2 திரைப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு விஷால் தற்போது லால் சலாம், மோகன் தாஸ், ஆர்யன் உள்ளிட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.