Homeசெய்திகள்சினிமாமாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுக்கும் எதார்த்தமான நாயகன்..... விஷ்ணு விஷால் பிறந்தநாள் ஸ்பெஷல்!

மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுக்கும் எதார்த்தமான நாயகன்….. விஷ்ணு விஷால் பிறந்தநாள் ஸ்பெஷல்!

-

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர்.மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுக்கும் எதார்த்தமான நாயகன்..... விஷ்ணு விஷால் பிறந்தநாள் ஸ்பெஷல்! கிராமத்துக் கதைக்களமாக இருந்தாலும் சரி நகர்புற கதைக்களமாக இருந்தாலும் சரி அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விடுவார். இவர் அறிமுகமான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அப்பாவி முகத்துடன் கிராமத்து இளைஞனாக நடித்து தனது முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுக்கும் எதார்த்தமான நாயகன்..... விஷ்ணு விஷால் பிறந்தநாள் ஸ்பெஷல்!அதன் பின்னர் குள்ளநரி கூட்டம், நீர் பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற படங்களில் நடித்து தன்னுடைய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி மேலே உயர்ந்தார். அடுத்ததாக டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் விஷ்ணு விஷாலுக்கு வெற்றி படமாக அமைந்தது. இதற்கிடையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற நகைச்சுவை படங்களிலும் நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்தார். அடுத்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் விஷ்ணு விஷாலின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுக்கும் எதார்த்தமான நாயகன்..... விஷ்ணு விஷால் பிறந்தநாள் ஸ்பெஷல்!அந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்தார். தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தும் வருகிறார். அதே சமயம் விஷ்ணு விஷால் , பல வெற்றிப் பட இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார். மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுக்கும் எதார்த்தமான நாயகன்..... விஷ்ணு விஷால் பிறந்தநாள் ஸ்பெஷல்!இவ்வாறு ஒவ்வொரு படங்களிலும் மாறுபட்ட கதை அம்சங்களைக் தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தருவதற்காக கடினமாக உழைத்து வருகிறார் விஷ்ணு விஷால். இந்நிலையில் இன்று (ஜூலை 17) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் விஷ்ணு விஷாலுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நாமும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவர் இன்னும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துவோம்.

MUST READ