Homeசெய்திகள்சினிமாவிஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் கைவிடப்பட்டதா?

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் கைவிடப்பட்டதா?

-

- Advertisement -

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் ஒன்று கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் கைவிடப்பட்டதா?

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையில் விஷ்ணு விஷால், ஆர்யன், ஓர் மாம்பழ சீசனில் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் தான் இவர், கலையரசன் நடிப்பில் வெளியான களவு எனும் திரைப்படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன் தாஸ் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். இந்தப் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்க கே எஸ் சுந்தரமூர்த்தி இப்படத்தின் இசையமைப்பாளராகவும் விக்னேஷ் ராஜகோபாலன் இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்தனர்.விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் கைவிடப்பட்டதா? முழுக்க முழுக்க திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படம் தொடர்பான அறிவிப்பு டீசரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே வெளியாகி படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி ஏறத்தாழ 75 சதவீதத்திற்கும் மேலான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் விஷ்ணு விஷாலுக்கும், இப்படத்தின் இயக்குனர் முரளி கார்த்திக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக மோகன் தாஸ் திரைப்படம் கைவிடப்பட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ