Homeசெய்திகள்சினிமாவிஜே சித்து ஹீரோவாக நடிக்கும் புதிய படம்........ படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

விஜே சித்து ஹீரோவாக நடிக்கும் புதிய படம்…….. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

-

- Advertisement -

விஜே சித்து ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.விஜே சித்து ஹீரோவாக நடிக்கும் புதிய படம்........ படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

விஜே சித்து vlogs என்ற யூடியூப் சேனலின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திருந்தவர்கள் விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான். யூடியூபில் இவர்கள் வெளியிடும் வீடியோ பெரும்பாலும் இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். எனவே மொட்டை மாடி பார்ட்டி போன்று இவர்கள் போடும் வீடியோக்கள் அனைத்துமே மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளிவிடும். அதேசமயம் விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களை திரையில் கண்ட ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் தான் விஜே சித்து தற்போது புதிய படம் ஒன்றை தானே இயக்கி, நடிக்கப் போகிறாராம். ஹர்ஷத் கானும் இணைந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் எனவும் இந்த படமானது நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது.விஜே சித்து ஹீரோவாக நடிக்கும் புதிய படம்........ படப்பிடிப்பு எப்போது தெரியுமா? மேலும் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது என லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ