இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கடைசியாக இவர் கஸ்டடி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் கோட் திரைப்படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. இந்த படம் மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் சமீபத்தில் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட நிலையில் தற்போது அமோக வெற்றி நடை போட்டு வருகிறது.
அதன்படி உலக அளவில் 288 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் படத்திற்கு பேராதரவு கிடைத்து வருவதால் இனிவரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், கோட் படத்தில் வில்லனான மைக் மோகன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் அரவிந்த்சாமி மற்றும் மாதவன் தான் தன்னுடைய முதல் சாய்ஸாக இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அது தளபதி Vs இளைய தளபதியாக மட்டுமே இருக்க வேண்டும் என தான் விரும்பியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கோட் திரைப்படத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைத்திருந்தார். சித்தார்த்தா நுனி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.