ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் அனிமல். இதில் ரன்பீர் கபீருடன் இணைந்து பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பலர் நடித்திருந்தனர். பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. படத்தில் வன்முறை காட்சிகளும் ஆபாச காட்சிகளும் நிறைந்து இருப்பதால் இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. திரை பிரபலங்கள் உட்பட பலரும் இப்படத்தை திட்டி தீர்த்தனர். இருந்த போதிலும் வட மாநிலங்களில் கிடைத்த வரவேற்பால் 800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்படம் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. அதேசமயம் திரையரங்குகளில் அனிமல் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளும் ஓடிடி இடம்பெறும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஓடிடி ரிலீசுக்கு பின் எத்தனை விமர்சனங்களை அனிமல் திரைப்படம் சந்திக்கப் போகிறது என்று கூறிவந்த நிலையில், தற்போது ராதிகா சரத்குமார் வெளியிட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
Have anyone cringed watching a movie? I wanted to throw up watching a particular movie😡😡😡😡so so angry
— Radikaa Sarathkumar (@realradikaa) January 27, 2024
அதாவது ராதிகா வெளியிட்ட பதிவில், ” யாருக்காவது எந்த படத்தை பார்க்கும் போது கிரிஞ்ஜா இருக்குன்னு தோணுமா? இந்தப் படத்தை பார்க்கும் போது வாந்தி எடுக்கும் அளவிற்கு கோபம் வருகிறது” என்று பதிவிட்டுள்ளார். எனவே நெட்டிசன்கள் பலரும் ராதிகா சரத்குமார் அனிமல் படத்தை தான் சுட்டிக்காட்டி உள்ளார் என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.