நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் சுமார் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து ரஜினி ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினியின் 170 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாஸில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். எஸ் ஆர் கதிர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரஜினி தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் திரையிடப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவ தொடங்கின. இந்த சூழ்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சூர்யாவின் கங்குவா திரைப்படம் 2024 அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆதலால் கங்குவா திரைப்படமானது வேட்டையன் திரைப்படத்துடன் மோத போகிறது என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.
“#Vettaiyan is Targeting for Diwali release👀. There are no films planned on Oct 10th. So we decided to release #Kanguva on Oct 10th. Emotionally & Professionally I won’t decide to come with #Rajinikanth sir🤝” pic.twitter.com/JzwadNNJyj
— AmuthaBharathi (@CinemaWithAB) July 10, 2024
இது தொடர்பாக கங்குவார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது, “வேட்டையன் திரைப்படம் தீபாவளியை தான் குறி வைத்துள்ளது. வேறு எந்த படமும் அக்டோபர் 10ல் ரிலீஸ் செய்ய திட்டமிடப்படவில்லை. அதனால் தான் கங்குவா படத்தை அக்டோபர் 10ஆம் தேதி வெளியிட திட்டமிட்டோம். எமோஷனலாகவும் தொழில் ரீதியாகவும் ரஜினி சாருடன் நான் மோத மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.