Homeசெய்திகள்சினிமா'எம்புரான்' படம் தள்ளிப்போவதற்கு என்ன காரணம்? .... தீயாய் பரவும் தகவல்!

‘எம்புரான்’ படம் தள்ளிப்போவதற்கு என்ன காரணம்? …. தீயாய் பரவும் தகவல்!

-

- Advertisement -

மோகன்லால் நடிப்பில் தற்போது எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 'எம்புரான்' படம் தள்ளிப்போவதற்கு என்ன காரணம்? .... தீயாய் பரவும் தகவல்!லைக்கா நிறுவனமும் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஏனென்றால் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணியில் வெளியான லூசிபர் திரைப்படம் கேரளாவை தாண்டி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. அதே சமயம் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. எனவே தற்போது லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் எம்புரான் படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 'எம்புரான்' படம் தள்ளிப்போவதற்கு என்ன காரணம்? .... தீயாய் பரவும் தகவல்!அதன்படி இப்படம் வருகின்ற மார்ச் 27 அன்று திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதாவது லைக்கா நிறுவனத்திற்கும், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடு இருக்கும் காரணத்தால் லைக்கா நிறுவனம், எம்புரான் படம் வெளியாவதற்கு முன்பாகவே தங்கள் முதலீடு செய்த தொகையை வட்டியுடன் திருப்பித் தருமாறு ஆசிர்வாத் நிறுவனத்திடம் கேட்பதாக தகவல் வெளியாகி வருகின்றனர்.'எம்புரான்' படம் தள்ளிப்போவதற்கு என்ன காரணம்? .... தீயாய் பரவும் தகவல்! எனவே இதனால்தான் எம்புரான் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ