Homeசெய்திகள்சினிமாஇளையராஜாவின் பயோபிக் படத்தின் டைட்டில் என்ன?

இளையராஜாவின் பயோபிக் படத்தின் டைட்டில் என்ன?

-

- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது பல படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் தனுஷ். இளையராஜாவின் பயோபிக் படத்தின் டைட்டில் என்ன?இந்தப் படத்தை ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு இன்று புதிய போஸ்டர் உடன் வெளியானது. அதன்படி இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். படத்தை கணக்கு மீடியா, PK பிரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.இளையராஜாவின் பயோபிக் படத்தின் டைட்டில் என்ன? ஒரு தரப்பில் இளையராஜாவின் பயோபிக் படம் என்பதால் இளையராஜா என்றுதான் தலைப்பு வைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு தரப்பில் இது பான் இந்தியா படமாக உருவாக இருப்பதால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் விதமாக MAESTRO என்று தலைப்பு வைத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ