Homeசெய்திகள்சினிமா'அவர் பாடினால் இளையராஜா பாடுவது போல் இருக்கிறது'..... தனுஷ் குறித்து நடிகை பிரியங்கா மோகன்!

‘அவர் பாடினால் இளையராஜா பாடுவது போல் இருக்கிறது’….. தனுஷ் குறித்து நடிகை பிரியங்கா மோகன்!

-

'அவர் பாடினால் இளையராஜா பாடுவது போல் இருக்கிறது'..... தனுஷ் குறித்து நடிகை பிரியங்கா மோகன்!நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். பீரியாடிக்
படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. 'அவர் பாடினால் இளையராஜா பாடுவது போல் இருக்கிறது'..... தனுஷ் குறித்து நடிகை பிரியங்கா மோகன்!சமீபத்தில் படத்தின் டீசரும் அதைத் தொடர்ந்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், அருண் மாதேஸ்வரன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பட குழுவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழா தொடங்குவதற்கு முன்பாக விஜயகாந்த் மற்றும் புனித் ராஜ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.'அவர் பாடினால் இளையராஜா பாடுவது போல் இருக்கிறது'..... தனுஷ் குறித்து நடிகை பிரியங்கா மோகன்! அதைத் தொடர்ந்து அந்த விழாவில் நடிகை பிரியங்கா மோகன், “கேப்டன் மில்லர் கதை எனக்கு மிகவும் பிடித்தது. துப்பாக்கி எல்லாம் எனக்கு பிடிக்கவே தெரியாது. அதனை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. இந்த படம் நன்றாக வருவதற்கு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் காரணம். சிவராஜ்குமாருடன் இணைந்து நடித்ததில் எனக்கு பெருமை. தனுஷ் உடன் நடிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தனுஷ் பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் பாடினால் இளையராஜா பாடுவது போல் இருக்கிறது. இப்போது தனுஷ் உடன் ஆக்சன் படம் நடித்து விட்டேன் அடுத்தது லவ் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று பேசியுள்ளார்.

MUST READ