2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று சலார். பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸ், கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இருவரும் சலார் படத்தின் மூலம் இணைந்ததால் இப்படத்திற்கு இமாலய எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த டிசம்பர் 22 அன்று திரையரங்குகளில் கோலாகலமாக இப்படம் வெளியானது. ஆனால் படத்தின் வெற்றி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. வழக்கமான கதையாகவும் கேஜிஎஃப் படத்தில் இருந்த ஏதோ ஒரு மேஜிக் இந்த படத்தில் மிஸ் ஆகி இருந்தது போலவும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஹிந்தி, தெலுங்கு மொழியில் படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் தென்னிந்திய மொழிகளில் படத்திற்கான வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. தற்போது வரை சுமாராக 700 கோடியை வசூலித்துள்ளது இப்படம். “சலார் – பார்ட் 1 (CEASE FIRE) “என்ற பெயரில் வெளியாகிய இப்படத்தின் “பார்ட் 2- சௌர்யாகன பர்வம்” எனும் பெயரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சலார் படத்தின் பார்ட் 2 , 2025 ஆம் ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே நிறுவனத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.மேலும் சலார் 1, வெறும் முன்னோட்டம் மட்டுமே என்றும் முக்கிய கதையும், அரசியல், ஆக்சன் எல்லாமே பார்ட் 2 படத்தில் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார். பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ஆகிய இருவரும் சலார் 2 படத்திற்காக மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அதற்கான கதையும் தயாராக உள்ளதாம். சலார் பார்ட் 1 சில எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் பல கோடி ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர். படத்தின் மேக்கிங் மிகத் தரமாக இருந்ததால் யாராலும் அதைக் குறை கூற முடியவில்லை என்றும் கூறியுள்ளார். சலார் பார்ட் 1 படத்தைப் போலவே பார்ட் 2வும் 2025 கிறிஸ்துமஸ் விடுமுறையை தான் டார்கெட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.