Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது?... வெளியானது புதிய அப்டேட்!

‘விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது?… வெளியானது புதிய அப்டேட்!

-

நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா அர்ஜுன் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது?... வெளியானது புதிய அப்டேட்!மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இவர்களின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.  மேலும் இவர்களுடன் இணைந்து ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ஆக்ஷன் கலந்த கதை களத்தில் உருவாகி வருகிறது.  மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் படப்பிடிப்பு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வேறொரு லொகேஷனை தேடி வந்த படக்குழுவினர் வெளிநாட்டிற்கு செல்ல உள்ளனராம். விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது?... வெளியானது புதிய அப்டேட்!அதன்படி மார்ச் 15ஆம் தேதி அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் சாதாரண பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ