ப்ளூ ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான படம் தான் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை எஸ் ஜெயக்குமார் இயக்கியிருந்தார். பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பகவதி பெருமாள், அருண் பாலாஜி, ஜெயச்சந்திரன், தாமு, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையும் அதையெல்லாம் கடந்து சாதிக்க முயற்சிக்கும் இளைஞர்கள் எப்படி வென்று காட்டுகிறார்கள் என்பதையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் படத்தின் வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் இப்படம் டென்ட் கொட்டா என்ற ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.