Homeசெய்திகள்சினிமா'தளபதி 69' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?.... சூப்பரான அப்டேட்!

‘தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?…. சூப்பரான அப்டேட்!

-

- Advertisement -

தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கோட் படத்திற்கு பிறகு தனது 69 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். 'தளபதி 69' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?.... சூப்பரான அப்டேட்!கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்திருக்கும் விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பாக வெளியாக ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். 'தளபதி 69' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?.... சூப்பரான அப்டேட்!இந்நிலையில் தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி 2025 ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு ஸ்பெஷலாக தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ