Homeசெய்திகள்சினிமாஸ்கிரிப்ட் வேலைகளை முடித்த சந்தீப் ரெட்டி வங்கா..... பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு எப்போது?

ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்த சந்தீப் ரெட்டி வங்கா….. பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு எப்போது?

-

- Advertisement -

சந்தீப் ரெட்டி வங்கா , பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்த சந்தீப் ரெட்டி வங்கா..... பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு எப்போது?

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் கடைசியாக கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக பிரபாஸ், கண்ணப்பா, தி ராஜாசாப் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சலார் 2 படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர், அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இப்படத்தில் மிர்ணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கப் போவதாகவும் சைஃப் அலிகான், கரீனா கபூர் ஆகியோர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்த சந்தீப் ரெட்டி வங்கா..... பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு எப்போது?இந்நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்டதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 மே மாதம் தொடங்கும் எனவும் புதிய தகவல் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ