Homeசெய்திகள்சினிமாரசிகர்கள் எதிர்பார்க்கும் 'புதுப்பேட்டை 2' படத்தின் ஷூட்டிங் எப்போது?

ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘புதுப்பேட்டை 2’ படத்தின் ஷூட்டிங் எப்போது?

-

ரசிகர்கள் எதிர்பார்க்கும் 'புதுப்பேட்டை 2' படத்தின் ஷூட்டிங் எப்போது?நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்த பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.

அதே சமயம் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் D51 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அடுத்ததாக நடிகர் தனுஷ், எச் வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.ரசிகர்கள் எதிர்பார்க்கும் 'புதுப்பேட்டை 2' படத்தின் ஷூட்டிங் எப்போது?

இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்த வருடம் புதுப்பேட்டை 2 படம் தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்க உள்ள புதுப்பேட்டை 2 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும், படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ரசிகர்கள் எதிர்பார்க்கும் 'புதுப்பேட்டை 2' படத்தின் ஷூட்டிங் எப்போது?

கடந்த 2006 இல் செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இன்று வரையிலும் புதுப்பேட்டை திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த புதுப்பேட்டை 2 திரைப்படம் தொடங்க இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ