Homeசெய்திகள்சினிமா'லியோ' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு எப்போது? வெளியான புது அப்டேட்

‘லியோ’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு எப்போது? வெளியான புது அப்டேட்

-

‘லியோ’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு எப்போது? வெளியான புது அப்டேட்

லண்டனில் நடிகர் விஜயின் ‘லியோ’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஒன்றரை மாதத்திற்கு முன்பே தொடங்கும் என பட வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

Image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பின் விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2-வது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. விஜய் பிறந்தநாள் அன்று லியோ படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் தற்போது யூடியூபில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளை கடந்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

அதோடு படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் பிறந்தநாளில், அவர்களின் சிறப்பு வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. படக்குழு அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ள, இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் லண்டனில் படத்தை வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் (Ahimsa Entertainment) என்ற பட வெளியீட்டு நிறுவனம் லியோ வெளியாகும் ஆறு வாரத்திற்கு முன்பே, அதாவது செப்டம்பர் 7ம் தேதியில் இருந்தே படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதாக றிவித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ