விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் சித்தார்த்தா நுனி படத்தின் ஒளிப்பதிவு பணிகளையும் கவனித்துள்ளார். இந்த படத்தில் விஜய் தவிர பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மைக் மோகன் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தில் நெருங்கி இருக்கும் நிலையில் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோவும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் விசில் போடு எனும் பாடலும் அதைத் தொடர்ந்து சின்ன சின்ன கண்கள் எனும் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இந்த படத்தின் மூன்றாவது பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அவ்வப்போது அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார்கள். அதன்படி தற்போது இந்த பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியான தகவலின் படி இந்த பாடல் விஜய் மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகிய இருவருக்குமான பாடல் என்று சொல்லப்படுகிறது. இந்த மூன்றாவது பாடலுக்கு ஸ்பார்க் சாங் என்று பெயர் வைத்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த பாடல் நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய பாடலாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா நடனமாடியுள்ள பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த பாடலை படத்தின் ரிலீஸுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். ஏனென்றால் திரிஷா நடனமாடும் இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் இதன் காரணமாகவே பாடலை இன்னும் வெளியிடாமல் சர்ப்ரைஸாக வைத்திருக்கிறார்கள் என்றும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
- Advertisement -