விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவிலும் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா , சினேகா, லைலா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா, திருவனந்தபுரம் இலங்கை போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அதேசமயம் படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. வெளியான இரண்டு பாடல்களுமே விஜய் குரலில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தி கோட் படத்திலிருந்து வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கும் முதல் பாடலான விசில் போடு பாடல் நாளை (ஜூலை 12) மாலை 5 மணி அளவில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என படக்குழுவினர் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் நாகாஸ் ஆசிஷ் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.