தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் இதுவரை 7 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது 8வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்குகிறார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, ஐந்தாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. வழக்கம்போல் சண்டைகள், கலவரங்கள் கடந்த சுவாரசியத்தை அதிகப்படுத்தி வருகின்றன. அதன்படி ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை மூன்று பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் (நேற்று) நவம்பர் 3 எலிமினேஷன் கிடையாது என விஜய் சேதுபதி அறிவித்திருக்கிறார். அதேசமயம் வைல்ட் கார்டு போட்டியாளர்களையும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த சீசனைப் போல் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரே நாளில் நுழைய இருப்பதாக சொல்லப்படும் நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் தான் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. அதில் ஒருவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்திருந்த ரயான் பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மாடல் அழகி ரியா தியாகராஜன், பேச்சாளர் மஞ்சரி, நடிகை வர்ஷினி வெங்கட், சுஜா வருணியின் கணவர் சிவகுமார், அடுத்தது ராணவ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக நுழைய இருக்கின்றனர். இருப்பினும் கடைசியில் வெற்றி வாய்ப்பை யார் தட்டிச்செல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.