சியான் இன்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விக்ரம். இவர் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது வீர தீர சூரன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் மதுரை, தென்காசி போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். ஆனால் இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து விக்ரம், பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்ததாக சியான் விக்ரமின் 63வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. தற்போது இது தொடர்பான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது அருள்நிதி இயக்கத்தில் வெளியான மௌனகுரு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாந்தகுமார், சியான் 63 படத்தை இயக்கப் போகிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் சாந்தகுமார் சமீபத்தில் அர்ஜுன் தாஸ் இயக்கத்தில் வெளியான ரசவாதி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் சாந்தகுமார், விக்ரம் நடிப்பில் வெளியான தில், தூள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.