Homeசெய்திகள்சினிமாபிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் யார்?

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் யார்?

-

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் யார்?விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.  சீரியல்களை விட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் டிஆர்பி அதிகம் ஏறும். அந்த அளவிற்கு இந்நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.  கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7, 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீசன் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த வார நாமினேஷன் பட்டியலில் விக்ரம், விசித்ரா, ரவீனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதில் இருந்தே நடிகை விசித்ரா அதிகமான ஓட்டுக்களை பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறார். அதே சமயம் ரவீனாவும் அதிக ஓட்டுக்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார். விக்ரம் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் யார்?

இந்நிலையில் இந்த வாரம் மக்களின் போட்டு விக்ரமை விட ரவீனாவிற்கு அதிகமாக இருக்கிறது. எனவே இந்த வாரம் விக்ரம் எலிமினேட் செய்யப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தபோதிலும் யார் வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ