Homeசெய்திகள்சினிமாசுந்தர்.சி, கார்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படம்.... கதாநாயகி யார் தெரியுமா?

சுந்தர்.சி, கார்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படம்…. கதாநாயகி யார் தெரியுமா?

-

- Advertisement -

சுந்தர்.சி, கார்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சுந்தர்.சி, கார்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படம்.... கதாநாயகி யார் தெரியுமா?

இயக்குனர் சுந்தர்.சி தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அந்த வகையில் இவர் தற்போது கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது தவிர நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில்தான் சுந்தர்.சி அடுத்ததாக நடிகர் கார்த்தியை இயக்கப் போவதாக சமீபகாலமாக தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி கார்த்தியிடம் சுந்தர்.சி கதை சொன்னதாகவும், அந்த கதை கார்த்திக்கு பிடித்துப் போக மூன்று மாதங்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என செய்திகள் பரவி வருகின்றன.
சுந்தர்.சி, கார்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படம்.... கதாநாயகி யார் தெரியுமா?எதிர்பாராத கூட்டணியில் உருவாகும் இந்த படம் தொடர்பான கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார் எனவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகை நயன்தாரா, கார்த்தியுடன் இணைந்து ‘காஷ்மோரா’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய இருக்கும் தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ