Homeசெய்திகள்சினிமா2024 டாப் ஹீரோ யார்? விஜய்யா..? சிவகார்த்திகேயனா..?

2024 டாப் ஹீரோ யார்? விஜய்யா..? சிவகார்த்திகேயனா..?

-

- Advertisement -
kadalkanni

2024-ம் ஆண்டு முடிகிறது. இந்த ஆண்டில் வெளியான படங்கள், அதன் லாப, நஷ்டங்களை கணக்கு பார்த்து ஏகப்பட்ட கட்டுரைகள் எழுதப்படுகின்றன. சரி, 20204ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ யார்? அதிக லாபத்தை சம்பாதித்து கொடுத்து முதலிடத்தில் இருப்பவர் யார் என்று விசாரித்தால், விஜய் என்று ஒரு தரப்பும், சிவகார்த்திகேயன் என இன்னொரு தரப்பும் மல்லு கட்டுகிறது.

அடுத்த தளபதி நீங்களா?.... சிவகார்த்திகேயன் சொன்ன பதில்!

உண்மையில் விஜய், சிவகார்த்திகேயன் என இருவரில் யார் டாப் ஹீரோ என தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் தரப்பில் விசாரித்தால் பல்வேறு தகவல்களை சொல்கிறார்கள். விஜய் நடித்த கோட் படமும், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமும் இந்த ஆண்டு வெளியாகி உள்ளது. இதில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படம்தான் அதிக வசூலை ஈட்டிய படம்.

இன்னும் சொல்லப்போனால் இந்தாண்டு தமிழில் வெளியான படங்களில் கோட்தான் அதிகம் வசூலித்துள்ளது. ஓட்டு மொத்தமாக 460 கோடிவரை கோட் வசூலித்ததாக தகவல். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமோ 350 கோடி வசூலித்துள்ளது. இரண்டு படங்களுக்கும் 110 கோடிக்கு மேல் வித்தியாசம். ஆனாலும், படத்தின் பட்ஜெட், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்கள், தியேட்டர் அதிபர்களுக்கு கிடைத்த லாபத்தின் அடிப்படையில் பார்த்தால் அமரன்தான் வெற்றிகரமான படம்.

சீமானெல்லாம் ஒரு ஆளேயில்லை, அவருக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை - தவெக நிா்வாகி விமர்சனம்

காரணம், கோட் படத்தின் பட்ஜெட் அதிகம். அந்த பட்ஜெட்டுக்கு 460 கோடி ஓகே. ஆனால், பட்ஜெட்டை ஒப்பிட்டால், முதலீட்டை விட 2 மடங்கு லாபத்தை அமரன் பெற்றுக்கொடுத்தது. தவிர. விமர்சன ரீதியாக கோட் படத்தை விட, அமரன் படமே கொண்டாடடப்பட்டது. தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் அமரன் பேசப்பட்டது. கண்டிப்பாக, சில தேசியவிருதுகளை அமரன் பெறும் என்று கூறப்படுகிறது. இப்படி கூட்டி கழித்து பார்த்தால் 2024ம் ஆண்டு விஜயை விட, ஒரு படி மேலே நிற்கிறார் சிவகார்த்திகேயன் என்கிறார்கள்.

ஆனால், சம்பளம் என்ற வகையில் பார்த்தால் சிவகார்த்திகேயன் 50, 60 கோடி அளவிலேயே நிற்கிறார். விஜய் 150 கோடியை தாண்டிவிட்டார். சினிமா அனுபவம், கொடுத்த வெற்றி, பிஸினஸ், ஓபனிங் இவற்றை கணக்கு போட்டு பார்த்தால் விஜய்தான் டாப்.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் அதிரடி அப்டேட்டுகள்!

ஆனாலும், இப்போது நடிக்கும் படத்துடன் சினிமாவை விட்டு விலகி, அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால், சிவகார்த்திகேயனுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இப்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படம் என இரண்டிலும் வெற்றியை கொடுத்தால் சிவகார்த்திகேயன் சம்பளமும் 100 கோடியை தாண்டும், அவருக்கான வியாபாரமும் அதிகரிக்கும் என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

MUST READ