Homeசெய்திகள்சினிமாதலைவர் 171 படத்தின் எழுத்தாளர் யார்?.... வலை வீசி தேடும் லோகேஷ் கனகராஜ்!

தலைவர் 171 படத்தின் எழுத்தாளர் யார்?…. வலை வீசி தேடும் லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

தலைவர் 171 படத்தின் எழுத்தாளர் யார்?.... வலை வீசி தேடும் லோகேஷ் கனகராஜ்!லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து “தலைவர் 171” படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் பாலிவுட் பிரபலம் ரன்வீர் சிங்கை கேமியோ ரோலில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் நடித்த நடிகர்கள் யாருமே தலைவர் 171-ல் நடிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் பல புதிய நடிகர்களை லோகேஷ், இப்படத்திற்காக தேர்வு செய்யவுள்ளார். அது மட்டுமில்லாமல் தற்போது இப்படத்திற்கான கதையை ரத்னகுமார் எழுதவில்லை என்றும் அதற்கு பதிலாக வேறொரு புதிய கதாசிரியருடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் எழுத உள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.தலைவர் 171 படத்தின் எழுத்தாளர் யார்?.... வலை வீசி தேடும் லோகேஷ் கனகராஜ்! லோகேஷின் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், லியோ போன்ற படங்களுக்கு கதாசிரியராக இருந்தவர் ரத்னகுமார். மேயாத மான், ஆடை, குலு குலு போன்ற படங்களையும் இயக்கியிருந்தார் ரத்னகுமார். தற்போது வேறு ஒரு புதிய படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இவ்வாறாக பிசியாக இருப்பதால் ரத்ன குமாரால் தலைவர் 171 கதையை எழுத முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே லோகேஷ் கனகராஜ் யாரை கதாசிரியராக தேர்வு செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. முந்தைய படங்கள் போல் அல்லாமல் இதில் வேறு மாதிரியான ஸ்டைலில் கதை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ