நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியல்களை விட டிஆர்பி-ல் முதலிடம் வகிப்பது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். முதல் 6 சீசன்களும் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது ஏழாவது சீசன் நடைபெற்று வருவது தான் அதற்கு சாட்சி. இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரும் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது விஷ்ணு, அர்ச்சனா, மாயா, மணி, விசித்ரா, தினேஷ், விஜய் வர்மா ஆகியோர் விளையாடுகின்றனர்.
இவர்களில் விசித்ரா இந்த வார எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது கடந்த சில வாரங்கள் ரசிகர்களுடைய விசித்ராவிற்கு ஆதரவு கிடைத்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தினேஷ் விவகாரத்தில் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்றுவிட்டார் விசித்ரா. அது மட்டும் இல்லாமல் அடுத்த வாரம் வெளியேறப் போவது மணியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே டைட்டிலை யார் வெல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.