இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமலஹாசன்
1996 ஆம் ஆண்டு வெளியான ஷங்கர் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு இந்தியன் 2 பட குழுவினர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான நிகழ்வை இன்று நடத்தினர். ஷங்கர், கமல்ஹாசன், அனிருத் ரவிச்சந்தர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் , டி.ஆர் சிலம்பரசன், லோகேஷ் கனகராஜ் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
அப்போது தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது ? என்று கேள்வி கேட்டு நடிகர் கமலஹாசன் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா மேடையை அதிர வைத்தார்.
விழா மேடையில் பேசிய நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் நடுவே கொரோனா விபத்து அரசியல் சோதனைகள் என பல சோதனைகள் வந்தது என தெரிவித்தார்.
தனது அடையாளம் தமிழன், இந்தியன் என பெருமிதம் தெரிவித்த கமல், பிரித்தாலும் (Divide and Rule) முயற்சி இந்தியாவில் நடக்காது என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதால் தான் நாம் அதிகமாக மார்தட்டிக் கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்தார். தமிழனுக்கு எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது தெரியும் என என்று தெரிவித்த கமல்ஹாசன் தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது என கேள்வி எழுப்பினார் மேலும் ஆசிய கண்டத்தில் ஒரு பெண்மணியை பிரதமர் ஆக்கி பார்த்த நாம் இதையும் செய்து காட்டுவோம் என பேசி விடை பெற்றார்.