Homeசெய்திகள்சினிமா"சென்னையில் பிரபல தியேட்டரை விலைக்கு வாங்கிய நயன் - விக்கி தம்பதி"

“சென்னையில் பிரபல தியேட்டரை விலைக்கு வாங்கிய நயன் – விக்கி தம்பதி”

-

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி சென்னையில் பிரபல திரையரங்கை விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தென்னிந்திய திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்‘ ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தில் காது கேளாத பெண்மணியாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றார் நயன்தாரா.

அப்படத்தின் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா பல படங்களில் நடித்து வருகிறார்.தற்போது ஐந்து கோடி முதல் 10 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கும் இவர் தனி விமானம் ஒன்றை வைத்துள்ளார்.

கோடியில் புரளும் நயன் – விக்கி தம்பதியினர் ‘ரௌடி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி சில படங்களை தயாரித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் காஸ்மெட்டிக் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். இது தவிர சென்னை கேரளா மும்பை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நயன்தாராவிற்கு சொந்தமான வீடுகளும் உள்ளன. இப்படியாக லக்ஸரி வாழ்க்கை வாழ்ந்து வரும் நயன்தாரா தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ஒன்றான அகஸ்தியா திரையரங்கை விலைக்கு வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திரையரங்கானது புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

MUST READ