Homeசெய்திகள்சினிமாதென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டாத ஜான்வி

தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டாத ஜான்வி

-

இந்திய திரையுலகில் ஒரு காலக்கட்டத்தில் கனவுக்கன்னியாக உலா வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இந்திய மொழிகள் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் ஒரு சில படங்களில் ஸ்ரீ தேவி நடித்துள்ளார். 80-ஸ் லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீ தேவி 2018-ம் ஆண்டு துபாயில் கணவருடன் இருந்தபோது, மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களான – ஜான்வி கபூரும், குஷி கபூரும் தற்போது சினிமாவில் நடிகைகளாக கலக்கி வருகின்றனர். மூத்த மகள் ஜான்வி கபூர் ஏற்கனவே பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து தேவரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவுக்கும் அறிமுகமாகிறார்.

இந்நிலையில், கால்ஷீட் கேட்டு மும்பை செல்லும் அனைத்து தென்னிந்திய தயாரிப்பாளர்களுக்கும் ஜான்வி கபூர் மறுப்பு தெரிவித்து வருகிறாராம். பையா படத்தின் 2-ம் பாகம், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதிய படம் என அனைத்து படங்களுக்கும் அவர் நோ கூறி இருக்கிறார். கதையையும், ஹீரோ பெயரையும் கேட்டுவிட்டு இறுதியில் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. தற்போது வரை தென்னிந்திய மொழிகளில் அதிக ஆர்வம் செலுத்தி புதிய படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை என நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருக்கிறாராம்.

MUST READ