Homeசெய்திகள்சினிமா‘தலைவரின் ப்ரோமோ எங்கே..?’ ரஜினியின் ஜெயிலர் 2 வருமா..? வராதா..?

‘தலைவரின் ப்ரோமோ எங்கே..?’ ரஜினியின் ஜெயிலர் 2 வருமா..? வராதா..?

-

- Advertisement -
kadalkanni

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் 2023-ல் ரிலீஸ் ஆகி, கிட்டத்தட்ட 650 கோடி வசூலித்து, ரஜினி நடித்த படங்களில் முக்கியமானதாக அமைந்தது.

இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வேலைகளில் இறக்கினார் நெல்சன். முந்தைய படத்தின் லாபம், வெற்றியை கணக்கில் கொண்டு ஜெயிலர்-2வுக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனமும் பச்சை கொடி காட்ட, சில மாதங்களாக ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரம் காண்பித்து, அதை பக்காவாக முடித்தார் நெல்சன்.

'ஜெயிலர் 2' படத்தில் இணையும் 'கே.ஜி.எஃப்' பட நடிகை!

ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி, ஜெயிலர் 2 அறிவிப்பு வரும், அதற்கான புரோமோ வீடியோ கூட தயார் என்று பேசப்பட்டது. ஆனால், ஏனோ அன்று அறிவிப்பு வரவில்லை. 2025ம் ஆண்டு புத்தாண்டு பரிசாக ஜெயிலர் 2 அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அன்று வரவில்லை. பொங்கலுக்கு கண்டிப்பாக வந்துவிடும் என்று இப்போது நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ஜெயிலர்2 வருமா? வராதா என்று விசாரித்தால், கண்டிப்பாக வரும். ஜெயிலர்2 திரைக்கதை, நடிகர்கள் தேர்வு உட்பட பல வேலைகளை பக்காவாக முடித்துவிட்டார் நெல்சன். கூலி படத்தில் ரஜினி பிஸியாக இருப்பதால், அந்த படத்தை ஜெயிலர் 2 அறிவிப்பு டிஸ்டர்ப் பண்ணக்கூடாது என்று சன் பிக்சர்ஸ் நினைக்கிறது. இரண்டு படத்தையும் அவர்களே தயாரிப்பதால் தேவையற்ற மோதல், ஈகோ பிரச்னை வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.அதனால்தான் 2முறை ஜெயிலர் 2 அறிவிப்பு தள்ளிப்போனது. பொங்கலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகுமா 'ஜெயிலர் 2' படத்தின் ப்ரோமோ?

ரஜினியும் கூலி பட வேலைகளை முடித்துவிட்டு, ஜெயிலர் 2வுக்கு போவோம். ஒரே நேரத்தில் 2 படங்கள் வேண்டாம் என்று நினைக்கிறாராம். ஜெயிலர் படத்தில் மலையாள திரையுலகை சேர்ந்த மோகன்லால், கன்னட திரையுலகை சேர்ந்த சிவராஜ்குமார், இந்தியை சேர்ந்த ஜாக்கிஷெராப் நடித்தனர். படத்தின் வெற்றிக்கு இந்த கூட்டணியும் ஒரு முக்கியமாக அமைந்தது. பல மொழிகளில் பிஸினஸ் அதிகமானது. அந்த பாணியில் ஜெயிலர் 2விலும் மற்ற மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் நெல்சன்.

MUST READ