Homeசெய்திகள்சினிமா'G.O.A.T' எனும் டைட்டில் மாற்றப்படுமா?.... 'தளபதி 68' படக்குழுவினரின் பிளான் என்ன?

‘G.O.A.T’ எனும் டைட்டில் மாற்றப்படுமா?…. ‘தளபதி 68’ படக்குழுவினரின் பிளான் என்ன?

-

'G.O.A.T' எனும் டைட்டில் மாற்றப்படுமா?.... 'தளபதி 68' படக்குழுவினரின் பிளான் என்ன?நடிகர் விஜய் ,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் படத்தின் அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பாக தளபதி 68 படத்திற்கு G.O.A.T Greatest Of All Time என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 31 மாலை என்று வெளியாகும் எனவும் அதை தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு போஸ்டர்களும் வெளியாகும் எனவும் பல செய்திகள் பரவி வருகிறது.

இதற்கிடையில் தளபதி 68 படத்திற்கு BOSS அல்லது Puzzle என்பதுதான் டைட்டில் ஆக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. படக்குழுவினர்களும் இந்த இரண்டு டைட்டில்களும் இல்லை என்று இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் G.O.A.T என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய போது படக்குழுவினர்கள் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே G.O.A.T என்பது தான் டைட்டில் என கிட்டத்தட்ட உறுதியானது.'G.O.A.T' எனும் டைட்டில் மாற்றப்படுமா?.... 'தளபதி 68' படக்குழுவினரின் பிளான் என்ன?

இந்நிலையில் ரகசியமாக வைத்திருந்த டைட்டில் இப்படி அனைவருக்கும் தெரிந்து விட்டதே என்று பட குழுவினர் இந்த டைட்டிலை மாற்ற முடிவு செய்தார்களாம். ஆனால் விஜய்க்கும் படத்தின் கதைக்கும் இந்த டைட்டில் மிகவும் பொருத்தமானதாக இருப்பதால் கடைசியில் இதை மாற்ற வேண்டாம் எனவும் முடிவு செய்துவிட்டார்களாம். இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

MUST READ