தனது நண்பரின் மறைவிற்கு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் நடிகை சிம்ரன்.
1990 காலகட்டங்களில் பல்வேறு ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடுப்பை வளைத்து இவர் ஆடும் நடனத்திற்கு மயங்காதவர்கள் எவரும் இலர். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கன்னத்தில் முத்தமிட்டால், வாரணம் ஆயிரம் போன்ற படங்களுக்காக சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் விஜயகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், மாதவன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். தற்போது பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வருகிறார். அந்த வகையில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது நண்பர் காமராஜரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
An unbelievable & shocking news . My Dear friend Mr. M Kamarajan is no more💔My right hand man from 25 years, my pillar of support. Someone who was always smiling, sharp and synonymous with reliability.
A determined and self made man. Without you my journey in cinema would have… pic.twitter.com/zYHhzO5q31— Simran (@SimranbaggaOffc) December 7, 2023
இந்த பதிவில் அவர், “எனது அன்பு நண்பர் திருகா எம் காமராஜனின் மறைவு நம்ப முடியாத மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி. 25 வருடங்களாக எனது வலது கரமாகவும் என் ஆதரவு தூணாகவும் விளங்கியவர். நீங்கள் இல்லாமல் எனது சினிமா பயணம் சாத்தியம் இல்லை. உங்களின் வாழ்க்கை பலருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காமராஜனின் குடும்பத்தாருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.