Homeசெய்திகள்சினிமாஉலகப் புகழ்பெற்ற பத்திரிகையில் விஜய் சேதுபதி... கிறிஸ்துமஸ் ட்ரீட்...

உலகப் புகழ்பெற்ற பத்திரிகையில் விஜய் சேதுபதி… கிறிஸ்துமஸ் ட்ரீட்…

-

- Advertisement -
உலகப் புகழ்பெற்ற பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் விஜய் சேதுபதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா பாதையில் கைபிடித்து நடந்து வந்த விஜய் சேதுபதி பல படங்களில் முகம் தெரியாத அளவு கூட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது தமிழில் ஹீரோவாக மட்டுமன்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார். கோலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதி அடுத்து அடுத்து பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் உப்பென்னா திரைப்படத்தில் தந்தை வேடத்தில் நடித்ததன் மூலம், தெலுங்கில் உச்ச நடிகராக மாறியுள்ளார். இதையடுத்து மும்பை கர் அதாவது மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகினார் விஜய் சேதுபதி. இருப்பினும் அப்படம் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. இயைடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் பாலிவுட் ஜாம்பவானுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் ஹிந்தி திரையுலகில் தனக்கான இடத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் விஜய் சேதுபதி.

தற்போது கேத்தரினா கைஃப், விஜய் சேதுபதி பிரதான வேடங்களில் நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் விஜய் சேதுபதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது வைரலாகி வருகிறது.

MUST READ