டாக்ஸிக் படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் யாஷ், கே ஜி எஃப் 1 மற்றும் கே ஜி எஃப் 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இதை தொடர்ந்து நடிகர் யாஷ் ராமாயாணா எனும் திரைப்படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். அதேசமயம் டாக்ஸிக் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் யாஷ். இந்த படம் நடிகர் யாஷின் 19 ஆவது படமாகும். இதனை தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான நளதமயந்தி திரைப்படத்தில் நடித்திருந்த கீது மோகன் தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டு அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கர்நாடகா பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் கர்நாடக வனத்துறையினர் டாக்ஸிக் படக்குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதாவது கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே பீன்யாவில் ஆய்வு செய்தபோது நூறுக்கும் மேற்பட்ட மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்பட்டிருந்தது சாட்டிலைட் படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. எனவே அனுமதி பெறாமல் மரங்களை திட்டியதற்காக டாக்ஸிக் படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.