டாக்ஸிக் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் யாஷ் கே ஜி எஃப் 1 மற்றும் கே ஜி எஃப் 2 ஆகிய படங்களுக்கு பிறகு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் தற்போது ரன்பீர் கபூர், சாய்பல்லவி ஆகியோருடன் இணைந்து ராமாயணா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் யாஷ் ராவணனாக நடித்து வருகிறார். அதேசமயம் இவர், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் யாஷுடன் இணைந்து கியாரா அத்வானி, நயன்தாரா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் யாஷ் வழக்கறிஞராக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் கர்நாடகா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் ஒரு சில காரணங்களால் 2025 டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இந்த தகவல் படக்குழுவினர் சார்பில் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 8ஆம் தேதி காலை 10:25 மணிக்கு, நடிகர் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்ஸிக் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக் குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.