யாஷிகா தான் ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகையான வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். பல படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் யாஷிகா.
முன்னர் விபத்துக்குள்ளாகி பின்னர் படுக்கையில் இருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் மீண்டும் பழையபடி சமூக வலைத்தளங்களில் ஹாட் ஆக இயங்கி வருகிறார்.
தற்போது யாஷிகா ட்விட்டரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். டுவிட்டரின் புதிய இஇஓ எலான் மஸ்க் தற்போது ப்ளூ டிக் வேண்டுமென்றால் காசு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ப்ளு டிக் கிடையாது என்று அறிவித்தார். அதன்படி பிரபலங்கள் அனைவர்க்கும் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
இதனால் கடுப்பான யாஷிகா, ‘நான்’ டுவிட்டரிலிருந்து வெளியேறுகிறேன். காசு கொடுத்து அங்கீகரிக்கப்பட்ட கணக்காக இருக்க வேண்டாம். டுவிட்டரிலிருந்து பிரபலங்கள் அனைவருமே வெளியேற வேண்டும். டுவிட்டரின் வீழ்ச்சி ஆரம்பமாடவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.