Homeசெய்திகள்சினிமாடாக்சிக் படத்திற்காக பெங்களூருவில் 1970 காலகட்ட அரங்கம் அமைப்பு

டாக்சிக் படத்திற்காக பெங்களூருவில் 1970 காலகட்ட அரங்கம் அமைப்பு

-

கன்னட திரையுலகம் மட்டுமன்றி இந்திய திரை உலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ். குறுகிய வட்டத்தில் 15 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருந்த யாஷை, கேஜிஎஃப் திரைப்படம் இந்திய அளவில் முன்னணி நடிகராக முன்னிறுத்தியது. இதைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2 படமும் அவரை வெற்றி நாயகனாக கொண்டாட வைத்தது. இன்று உலகமே அடையாளம் தெரிந்துகொள்ளும் அளவுக்கு நடிகர் யாஷ் உயர்ந்திருக்கிறார். கேஜிஎஃப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து யாஷ் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார்.
 கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இத்திரைப்படம கோவாவில் போதைப் பொருள் நடத்தும் கும்பலை மையப்படுத்தி உருவாகி வருகிறது. ஆக்‌ஷன் நிறைந்த ஒரு படமாக இது தயாராகி வருகிறது. டாக்சிக் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ள இப்படத்தில் யாஷூக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வாணி நடிப்பதாகவும், அக்காவாக நயன்தாரா நடிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் பெங்களூரு பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பான் இந்தியா முறையில் உருவாகும் இந்த படத்திற்காக, பெங்களூரு புறநகர் பகுதியில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாம். அங்கு 1950 மற்றும் 70-களில் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

MUST READ