யாஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் சாப்டர் 1 மற்றும் 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மாஸான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த இரண்டு படங்களுமே நடிகர் யாஷை இந்திய அளவில் பிரபலமாக்கியது. இதன் பின்னர் யாஷ், ராமாயணா எனும் ராவணனாக திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் இவர் டாக்ஸிக் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான நளதமயந்தி திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்த கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
மேலும் இதனை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் யாஷுக்கு அக்காவாக நடிகை நயன்தாரா நடிக்க ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் ஹுமா குரேஷி இந்த படத்தில் வில்லியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கர்நாடகா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் யாஷின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 8) டாக்ஸிக் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் நடிகர் யாஷ் கெத்தாக, மாஸாக காணப்படுகிறார். அடுத்தது இந்த வீடியோவை பார்க்கும் போது இப்படம் கேங்ஸ்டர் படம் போல் தெரிகிறது. இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் இந்த வீடியோவின் இறுதியில் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே இப்படம் 2025 ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபகாலமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.