நடிகர் யாஷ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே ஜி எஃப் சாப்டர் 1 மற்றும் கே ஜி எஃப் சாப்டர் 2 ஆகிய படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார். அடுத்ததாக இவர் டாக்ஸிக் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தமிழில் நளதமயந்தி எனும் திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்த கீது மோகன் தாஸ் இயக்குகிறார். நடிகர் யாஷின் 19 ஆவது படமான இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் யாஷிற்கு அக்காவாக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்ததாக இந்த படத்தில் ஹுமா குரேஷி வில்லியாகவும் கியாரா அத்வானி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த படத்தை 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 8) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
The journey begins 🎬 #Toxic pic.twitter.com/Ysqmr4xrpg
— Yash (@TheNameIsYash) August 8, 2024
ஏற்கனவே டாக்ஸிக் திரைப்படம் கர்நாடகா, பெங்களூர் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில் படமானது இன்று தொடங்கப்பட்டுள்ளதாக நடிகர் யாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.