Homeசெய்திகள்சினிமாஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் பரிசாக யாத்ரா 2 படக்குழு செய்த சம்பவம்

ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் பரிசாக யாத்ரா 2 படக்குழு செய்த சம்பவம்

-

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘யாத்ரா 2’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி கடந்த 2019-ம் ஆம்டு வெளியான திரைப்படம் யாத்ரா. மஹி வி ராகவ் இயக்கிய இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படத்தை 70mm என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தெலுங்கில் வெளியான இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாகியுள்ளது. யாத்ரா 2 என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தையும் முதல் பாகத்தின் இயக்குநர் மஹி ராகவே இப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.
இரண்டாம் பாகத்தில் பொறுத்தவரை ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகனும், ஆந்திராவின் தற்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியாக பிரபல தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார். முந்தைய பாகத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘யாத்ரா 2’ படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது டிரெண்டாகி வருகிறது.

MUST READ