ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் ராம். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படங்களாக அமைந்தன. அடுத்தது இயக்குனர் ராம், ஏழு கடல் ஏழு மலை எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏகாம்பரம் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இயக்குனர் ராமின் மற்ற படங்களைப் போல் இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த படம் இதுவரை ரிலீஸ் செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த படமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வரும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் முன்னோட்ட வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.