கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் தான் ஜெயிலர். இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். அதன்படி தற்போது ஜெயிலர் 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. எனவே படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஏற்கனவே வெளியான தகவலின்படி ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு ஹுக்கும் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் யோகி பாபு சமீபத்தில் நடந்த பேட்டியில் ஜெயிலர் 2 படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
YogiBabu confirms his presence in #Jailer2 🔥
“Nelson is writing up something special for my character in Jailer2″🌟Superstar #Rajinikanth | #Nelson | #Anirudhpic.twitter.com/fLwq81OeYH
— AmuthaBharathi (@CinemaWithAB) July 29, 2024
அதில் அவர் பேசியதாவது, “கோலமாவு கோகிலா, பீஸ்ட், டாக்டர் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு நெல்சன் என்னை ஜெயிலர் திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் நான் காமெடியனாக நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். எனவே இனிவரும் நாட்களில் ஜெயிலர் 2 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.