Homeசெய்திகள்சினிமாஅபியும் நானும் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!

அபியும் நானும் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!

-

- Advertisement -

யோகி பாபு நகைச்சுவை நடிகராக திரையுலகத்திற்கு அறிமுகமானவர். தற்போது கதாநாயகனாக பெரும்பாலான படங்களில் நடித்து வருகிறார். இவர், நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை தொடர்ந்து பெரும்பாலான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தர்ம பிரபு, மண்டேலா போன்ற திரைப்படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது. இப்படங்களில் கதாநாயகனாக நடித்து திரை உலகில் தனக்கென முத்திரை பதித்தவர்.

யோகி பாபு தற்போது அயலான் ,ஜெயிலர், தாதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர், மொழி ,அபியும் நானும், பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் ராதா மோகன் மொழி, பயணம் ,அபியும் நானும் போன்ற படங்களுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.

MUST READ