பூமர் அங்கிள் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் யோகி பாபு தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்படி போட், வானவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் யோகி பாபு. மேலும் ஜோரா கைய தட்டுங்க என்ற புதிய படத்திலும் நடிக்கிறார். இதற்கிடையில் நடிகர் யோகி பாபு, பூமர் அங்கிள் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஓவியா நீண்ட வருடங்கள் கழித்து யோகி பாபுவுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ரோபோ சங்கர், பழைய ஜோக்ஸ் தங்கதுரை, KPY பாலா போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்வதீஷ் இயக்க தர்ம பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. 90ஸ் கிட்ஸ்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. அதே சமயம் கலகலப்பான காமெடி படமாகவும் தயாராகி இருந்தது. இந்த படமானது கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இந்த படமானது 2024 ஜூன் 7ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.