Homeசெய்திகள்சினிமாயோகி பாபு நடித்துள்ள 'போட்' ..... இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்!

யோகி பாபு நடித்துள்ள ‘போட்’ ….. இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்!

-

யோகி பாபு நடித்துள்ள போட் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராக ரஜினி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். யோகி பாபு நடித்துள்ள 'போட்' ..... இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்!அதே சமயம் இவர் மண்டேலா படத்தின் மாபெரும் வெற்றிக்கு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் யோகி பாபு நடிப்பில் மிஸ் மேகி, வானவன், ஜோரா கைய தட்டுங்க போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் யோகி பாபு, சிம்பு தேவன் இயக்கத்தில் போட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், கௌரி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். காமெடி கலந்த சர்வைவல் திரில்லர் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இதனை மாலி அண்ட் மான்வி நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க மகேஷ் மாணிக்கம் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ட்ரெய்லரை விஜய் சேதுபதி, நெல்சன் திலிப் குமார், ஜிவி பிரகாஷ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ