யோகி பாபுவின் லக்கி மேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகரான யோகி பாபு, ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அதே சமயம் மண்டேலா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது பாலாஜி வேணுகோபால் இயக்கிய லக்கி மேன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு உடன் இணைந்து ஆர் எஸ் சிவாஜி, ரேச்சல் ரெபேக்கா, வீரா மற்றும் பலர் நடித்துள்ளனர். திங் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.