Homeசெய்திகள்சினிமாநேரடி பாலிவுட் படத்தில் நடிக்கும் யோகி பாபு!

நேரடி பாலிவுட் படத்தில் நடிக்கும் யோகி பாபு!

-

நடிகர் யோகி பாபு நேரடி பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.நேரடி பாலிவுட் படத்தில் நடிக்கும் யோகி பாபு!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகனாக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் பூமர் ஆங்கிள், மேகி, வானவன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் யோகி பாபு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேரடி இந்தி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் யோகி பாபு. நேரடி பாலிவுட் படத்தில் நடிக்கும் யோகி பாபு!அதன்படி டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள பூல் புலையா படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அனீஸ் பாஸ்மி இயக்க உள்ள நிலையில் யோகிபாபு உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பூல் புலையா படத்தின் முதல் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 3ஆம் பாகமும் உருவாக உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இத்திரைப்படம் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ